Necessary Certificate to get Educational Loan in Tamil

0

Necessary Certificate to get Educational Loan in Tamil:

Letti-S / Pixabay
என்னென்ன ஆவணங்களை நீங்கள் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
நீங்கள் மாத வருமானம் பெறுபவராக இருந்தால்
1. அடையாளச் சான்றிதழ்
நீங்கள் மாத மருமானம் பெறுபவராக இருந்தால், உங்கள் அடையாளத்தை நிரூபிக்கும் பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, அரசு வழங்கும் ஏதாவது அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
2. வருமான சான்றிதழ்
நீங்கள் சம்பளம் வாங்குவதற்கான வருமான சான்றிதழ், அல்லது படிவம் 16 ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
3. இருப்பிடச் சான்று
நீங்கள் குடியிருப்பதற்கான சான்றைத் தரும் வங்கி கணக்கு அறிக்கை, இறுதியாக மின் கட்டணத்தை செலுத்தியதற்கான ரசீது, மொபைல் கட்டணத்தைச் செலுத்தியற்கான ரசீது, தொலைபேசிக் கட்டணத்தை செலுத்தியதற்கான ரசீது, கிரெடிட் கார்டு அறிக்கை, இருக்கும் வீட்டிற்கான குத்தகை ஒப்பந்த சான்று ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். எந்த வங்கியில் உங்கள் சம்பளம் கிரெடிட் செய்யப்படுகிறதோ, அந்த வங்கியின் அறிக்கை மிகவும் முக்கியம்.
மற்ற பணிகளில் ஈடுபடுபவராக இருந்தால்
1. அடையாளச் சான்றிதழ்
பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
2. வருமான சான்று
நீங்கள் ஈட்டும் வருமானத்திற்கு 2 ஆண்டுகளுக்கான ஐடி ரிட்டர்ன்ஸ் மற்றும் 2 ஆண்டுகளுக்கான வருமான சான்று மற்றும் அதற்காக அரசு தணிக்கையாளர் அளித்த சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
3. இருப்பிடச் சான்று
வங்கிக் கணக்கு அறிக்கை, இறுதியாக செலுத்திய மின் கட்டண ரசீது, மொபைல் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது, கிரெடிட் கார்டின் இறுதி அறிக்கை, குடியிறுக்கும் வீட்டிற்கான குத்தகை ஒப்பந்த ரசீது ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்
READ  How to to get Soft feet in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here