How to to get Soft feet in Tamil

0

How to to get Soft feet in Tamil:

vait_mcright / Pixabay

மென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான 10 எளிய குறிப்புகள்

கால்கள் தான் நம்முடைய உடலின் முழு எடையையும் சமநிலையில் இருக்க செய்கிறது. அந்த கால்கள் உலர்ந்து, பிளவுற்று இருந்தால் காண்பவர் கண்ணை கவரும் வகையில் இல்லாமல் உடலின் ஒட்டுமொத்த அழகு தோற்றத்தையும் கண்டிப்பாக கெடுத்துவிடும். ஒருவர் சுகாதாரமான முறையில் இருப்பவர் என்பதை அவர்களின் கால்களை பார்ப்பதன் மூலம் கண்டறியலாம். அந்த கால்களை அழகுடன் வெளிப்படுத்துவதற்கு அணியும் வாருள்ள செருப்பால், அவை மேலும் அழகுக்கு அழகு சேர்க்கும். ஆனால் சுமாரான கால்களாக இருக்கும் போது அது சங்கடப்படுத்துவதாக இருக்கும். நம்மில் பெரும்பான்மை மக்கள் இப்பிரச்சனையை தினசரி அடிப்படையில் சமாளித்துக் கொண்டிருந்தாலும், சிலருக்கு இது ஒரு பருவக்கால பிரச்சனையாக இருக்கிறது.

READ  How to handle man in Tamil

ஆக எப்படி பார்த்தாலும், இந்த பிரச்சினையை ஆண்டு முழுவதுமோ அல்லது எப்பொழுதாவது ஒரு முறையோ சந்திக்க நேர்ந்தாலும் அதை தவிர்க்க முடியாது. அதனால் திறந்த-தோல்-காலணிகளை அணிய விரும்பினால், அப்போது கால்களை நன்கு அழகாக காணப்படுவதற்கு, ஒருசில குறிப்புகளை கீழே கொடுத்துள்ளோம். இத்தகைய குறிப்புகள் பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் தான். சரி, அதைப் பார்ப்போமா!!!


கால்களை நீரால் கழுவ வேண்டும்
குளிக்கும் போது கால்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முற்றிலும் கால்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக பயன்படுத்தும் சோப்பு அல்லது உடல் கழுவியினால் கால்களை நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும். மேலும் துர்நாற்றம் மற்றும் அழுக்கு இவற்றிலிருந்து விடுபட தூங்க செல்லும் முன் ஒவ்வொரு இரவும் கால்களை நன்கு கழுவ வேண்டும். ஏனெனில் அழுக்கு படிந்த கால்கள் பிளவுற்ற கால்களை போன்றே மோசமானது.

READ  Necessary Documents for an Education loan in India


பால்
சிகிச்சை பாலை 250 மி.லி கூடுதலாக வாங்கி, குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது அதில் கால்களை ஊற வைக்கவும். ஆனால் பால் சற்று வெதுவெதுப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இது போன்று செய்வதால் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ள பாலால் அனைத்து கடினமான புள்ளிகளும் நீக்கப்பட்டு, தோல் மிகவும் மென்மையாக இருக்கும்.

READ  How to Cure cancer Naturally


கால்களை ஊற வைக்கவும்
கால்களை நன்றாக கழுவுவதால் மட்டும் மென்மையானது ஆக்குவதற்கு போதுமானதாகாது. கால்களை நன்றாக தேய்ப்பது தவிர, குறைந்தது 5-10 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான நீரில் கால்களை ஊற வைக்க வேண்டும்.


படிகக் கல்லைப் பயன்படுத்தவும்
ஒரு படிகக் கல்லை எடுத்து குதிகால், கால்விரல்கள் மற்றும் பாதம் இவற்றை மெதுவாக தேய்க்கவும். இவ்வாறு குறைந்தது வாரம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது செய்யவும். இந்த முறையினால் படிகக்கல், கால்களை மென்மையாகவும் மற்றும் பட்டு போன்றும் செய்து அதிலுள்ள இறந்த செல்களை நீக்கவும் உதவுகிறது. குறிப்பாக கடினமாகவும் மற்றும் உலர்ந்தும் இருக்கும் பகுதிகளில் கவனம் செலுத்தி ஒவ்வொரு பாதத்திற்கும் இரண்டு நிமிடங்கள் செலவு செய்யவும். தோல் கிழிவதையும் மற்றும் எரிச்சல் அடைவதையும் தடுக்க மிக கடுமையாக தேய்ப்பதை தவிர்க்கவும்.

READ  How to Find Lost Phone in Tamil


நகங்களை ஷேப் செய்யவும்
நக வெட்டியைக் கொண்டுக் கூடுதலாக வளர்ந்துள்ள கால்விரல் நகங்களை வெட்டிவிடவும். கால்களை தேய்த்து சுத்தம் செய்யும் சிகிச்சை முடித்தவுடன் கால்விரல் நகங்களை வடிவமைக்கவும். நீண்ட கால் நகங்களால் அழுக்கு மற்றும் நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் விருந்தாளிப் போல் நகங்களின் கீழே தங்கி விடக் கூடும்.

READ  Greatest achievements in the world


காலணிகளை காற்று பட வைக்கவும்
குறிப்பாக மீண்டும் ஸ்னீக்கர்கள் மற்றும் பூட்ஸ் அணிவதற்கு முன் குறைந்தபட்சம் ஒரு நாளாவது காலணிகளை வெளியே காற்று பட வைக்கவும். ஸ்னீக்கர்களிலிருந்து துர்நாற்றம் வந்தால், அவைகளை வெளியே காற்றில் வைக்கவும் அல்லது சுத்தம் செய்யவும். துர்நாற்றமுள்ள காலணிகளை அணிவது காலில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.


மாய்ச்சுரைசர்
கொஞ்சம் மாய்ஸ்சரைசர் எடுத்து கால்களில் பரவலாக தேய்க்கவும் மற்றும் சுத்தமான பருத்தி காலுறைகளை இடவும். தூங்குவதற்கு முன் அதை செய்ய அதனால் ஈரப்பதம் விளைவு அதிகமாக இருக்கும். வேண்டுமெனில் தாவர எண்ணெயை க்ரீமுக்கு பதிலாக பயன்படுத்தலாம்.

READ  How to Find Lost Mobile


சரியான காலணிகளை அணியவும்
சரியான பொருத்தமான காலணிகளையே அணியவும். ஒரு நல்ல பொருத்தமான ஜோடி காலணிகளால் கடுமையான பிளவுகள் பாதங்களில் ஏற்பட இருக்கும் வாய்ப்புக்களை குறைக்கிறது.


ஓய்வு அவசியம்
கால்களில் பிளவுகள் ஏற்படக் காரணம், நீண்ட நேரம் நிற்பதாலும் அல்லது நடப்பதாலும் உண்டாகின்றது. கால்களுக்கு ஓய்வு கொடுத்தல் மிக முக்கியமானது. அது குதிகால்களில் உண்டாகும் பிளவுகள் மற்றும் வலி வேதனையைத் தடுக்கிறது.


மசாஜ்
கால்களுக்கு மசாஜ் செய்வது இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் சோர்வை குறைக்கும். சிகிச்சையின் போது செய்யப்படும் உரிதல் மற்றும் எண்ணெய் ஆகியவற்றால் தோல் மென்மையாவதும் மற்றும் புதுப்பிக்கப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here