அண்ணாத்த திரைவிமர்சனம்:
அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆவார். நடிகை நயன்தாரா இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தை இயக்கியவர் டைரக்டர் சிவா ஆவார். இமான் அருமையாக இந்த படத்திற்கு இசை அமைத்துக் கொடுத்துள்ளார். ஒளிப்பதிவு வெற்றி பழனிச்சாமி அவர்கள் பண்ணியிருக்கிறார். மற்றும் பல பிரபலமான நடிகைகள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள் குஷ்பு, மீனா ,பாண்டியராஜன் , சூரி மற்றும் சதீஷ் போன்ற பல நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். முக்கியமான கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார்.
சரி வாங்க நாம் கதையை பார்க்கலாம், இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு ஊராட்சி மன்றத் தலைவராக நடித்திருக்கிறார். மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் இவர் தான் தீர்த்து வைப்பார் மக்களிடம் நல்ல வரவேற்பும் பெற்றிருந்தார். ரஜினிகாந்த் அவர்களுக்கு தனது தங்கை கீர்த்தி சுரேஷ் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். தங்கச்சிக்காக எது வேண்டுமென்றாலும் கூட செய்வதற்குத் தயாராக இருப்பார். கீர்த்தி சுரேஷ் தனது படிப்பை முடித்து விட்டு தனது சொந்த ஊருக்கு அண்ணனை பார்க்க வரும்போது திருவிழா போல் அண்ணன் ரெடி பண்ணி இருப்பாரு தன் தங்கையின் வருகைக்காக. கீர்த்தி சுரேஷ் வந்து இறங்கிய உடனே அண்ணன் தங்கை பாசம் மிகவும் வெகுவாக இருக்கும். அதற்கு அடுத்த படி ஊரில் உள்ள அனைவரும் ரஜினிகாந்திடம் உனது தங்கைக்கு எப்பொழுது கல்யாணம் நடக்கும் என்று அனைவரும் கேட்பார்கள். உடனே ரஜினிகாந்தும் தனது தங்கைக்கு திருமணம் செய்து வைப்பதற்காக மாப்பிள்ளை தேடி வருவார்கள். அதன் பிறகு மாப்பிள்ளை கண்டுபிடித்து கல்யாணம் வேலையை ஆரம்பிக்கும் பொழுது தனது தங்கை இன்னொருவனை காதலித்து அவனுடன் சென்று விடுவார். அதன்பிறகு ரஜினிக்கு வந்த பிரச்சனை என்னவென்றும், காதலித்து சென்ற தனது தங்கையின் பிரச்சனையை அவர் எப்படி சமாளித்தார் என்பதும் இந்த படத்தின் மீதி கதை யாகும்.
படத்தில் ரஜினிகாந்திற்கு காளையன் என்ற பெயர் மிகவும் அருமையாக இருந்தது. பெயருக்கு ஏற்றார்போல் தனது காமெடி ஆக்ஷன் சென்டிமென்ட் போன்ற அனைத்து அனைத்து காட்சிகளும் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் நயன்தாராவுடன் ரொமான்ஸ் போன்ற காட்சிகளும் சிறப்பாக நடித்திருந்தார் சண்டைக்காட்சிகளில் எதிரிகளை துவம்சம் செய்வது மிகவும் அருமையாக இருந்தது. தங்கையாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ் அவர்கள் நடிப்பை மிகவும் வரவேற்புதாக இருந்தது. அவர் தனது அண்ணன் மீது வைத்திருந்த பாசம் போராட்டம் மிகவும் அருமையாக நடித்திருந்தார். அவர் காதலித்து திருமணம் செய்துகொண்ட பிறகு அங்கு வந்த பிரச்சனையை அவர் சமாளித்த விதம் மிக அருமையாக இருந்தது.
நயன்தாரா ஒரு வழக்கறிஞராக நடித்த இருந்தார் மக்களிடம் அவருடைய காட்சிகள் வரும் பொழுது மக்கள் அனைவரும் அழகாக பார்த்து ரசித்தனர்.
நயன்தாரா கீர்த்தி சுரேஷ் மற்றும் ரஜினிகாந்திற்கு கடைசிவரை ஒரு உதவியாளராக இருந்து வந்தார்.
குஷ்பு மற்றும் மீனா அவர்கள் கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக நடித்து காட்டி உள்ளார். குஷ்பு மற்றும் மீனா பல வருடங்கள் கழித்து மீண்டும் ரஜினியுடன் இணைந்து மக்களுக்கு மிகவும் நல்ல வரவேற்பை தந்தது. காமெடியாக நடித்துவந்த சூரி மற்றும் சதீஷ் அவருடைய பணியை மிகச் சிறப்பாக பணியாற்றி வந்தனர்.
இந்தப் படம் முழுவதும் ஒரு அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுத்திருக்கிறார்கள். இதுபோன்று வழக்கம்போல் பல அண்ணன் தங்கை படங்கள் இருந்தாலும் ரஜினிக்காக டைரக்டர் சிவா புதிய மாடல்களில் எடுத்திருக்கிறார். இது ஒரு நல்ல குடும்பப் படமாக அமைந்திருக்கிறது. படத்தில் பின்னணி இசை மற்றும் பாடல்களில் உள்ள இசை மிகவும் அருமையாக இமான் இசையமைத்துள்ளார். ரஜினி வரும் ஒவ்வொரு காட்சிகளுக்கும் இமான் அருமையாக இசை கொடுத்துள்ளார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவோடு திரையில் பார்க்கும்போது மிகவும் கலர்புல்லாக இருக்கிறது.
இந்தப் படம் அண்ணன் தங்கை பாசம் இது இதற்கு முன்னாள் பல படங்கள் இது மாதிரி வந்திருக்கிறது. ஆகையால் இந்த படம் சுமாராகத்தான் இருக்கிறது. மொத்தத்தில் ரசிகர்களுக்கு அண்ணாத்த திரைப்படம் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.