UNCHARTED MOVIES TAMIL REVIEW :
Directed by | Rn Fubeleischer |
---|---|
Screenplay by |
|
Story by |
|
Based on | Uncharted |
Produced by |
|
Starring |
|
சோனியின் மிகவும் புகழ்பெற்ற வீடியோ கேம் மூலமாக இந்த அன்சார்டட் அதே கேரக்டர்களுடன் மக்களுக்கு விருந்தாக திரைக்கு வந்திருக்கிறது.
ஆய்வாளர் மெக்கலன் அவர்கள் திரட்டிய மான்காடா மாளிகையில் 500 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த தங்க புதையல்கள் எடுக்கப் போன நபர்கள் பல ரத்தக் காவுகளை வாங்கியதால் அதனை யாரும் எடுக்காமல் இருக்கிறார்கள். சாண்டியாகோ மான்காடா தங்கத்தை நாம் தான் எடுக்க வேண்டும் என்று முயற்சி எடுத்துக் கொள்கிறார். இவர்களைப் போலவே அந்த தங்கம் மிகவும் மதிப்பு தக்கதாக இருப்பதால் அதனை கொள்ளையடிக்க திட்டம் இடுகிறார்கள் சுல்லி – நேட் – க்லோயி கூட்டணியாகும். தங்களிடம் இருக்கும் ஆயுதங்களை வைத்து உலகின் மிகப் பழமையான தங்கத்தை எப்படி இந்த இரு கூட்டணிகளும் எடுக்கப் போகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் சவாலான கதையாகும்.
நமது உடலில் ஓடும் ரத்தத்தில் கொள்ளையர்களின் ரத்தம் இருக்கிறது என்று நாம் அனைவரும் சர் பிரான்சிஸ் டிரேக்கின் வழித்தோன்றல்கள் என்று நேட் சிறுவயதிலிருந்தே தனது சகோதரன் சாம் யங்-கால் தங்கப்புதையல் குறித்து வளர்ந்து வருகிறார்கள். இருவரும் வரைபடம் தொலையும் இடத்தில் நேட்டை பிரிந்து செல்கிறார் சாம். அதன்பிறகு நேட் ஒரு திறமைமிக்க புதையல் வேட்டையாளனை வைத்து கொள்ளையடிக்கும் பணியில் வருகிறார்.
நேட் அலைஸ் நாதன் டிரேக்காக டாம் ஹாலண்ட் நடித்துள்ளார். இந்த திரைப்படம் அதிக வசூல் லாபத்தை படைத்திருக்கிறது. இந்தப் படத்தில் நேட்டின் கதாபாத்திரம் டாம் ஹாலண்ட் வழியாக மக்களுக்கு சரியாக திரைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் ஆக்சன் எமோசனல் மற்றும் கேலி செய்வது என திரைப்படம் முழுவதும் தனித்துவமாக டாம் தெரிகிறார். அவர் தன்னுடைய முழு நடிப்பு திறமையும் எந்த படத்தில் காட்டியிருக்கிறார். சொல்லியாக மார்க் வால்பெர்க் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவரது காட்சிகள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பாராட்டும் விதமாக இருக்கிறது.
இந்தத் திரைப்படம் சாதாரண திருட்டு வேலையை ஆரம்பித்து மிகப்பெரிய அட்வெண்சர் திரைப்படமாக மாறும்போது ஹாலண்ட் மற்றும் வால்ல்பெர்க் இருவரும் தனது நகைச்சுவையை மக்களிடையே ரசிக்கும்படியாக செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்களுடன் இணைந்து நடித்த க்ளோயி கேரக்டரில் சோபியா அலி சண்டை கதாபாத்திரத்தில் மிகுந்த கவனம் செலுத்தி நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கேப்ரியல், ஆண்டோயோ தங்களுடைய பங்களிப்பை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் இயக்குனர் ப்ளீஷர் தனது சொந்தக் கற்பனைகள் உடன் சேர்ந்து படத்தை எடுத்திருக்கிறார். இந்த திரைப்படத்திலும் ஆனால் சண்டைக்காட்சியை மக்களிடையே விளம்பரப்படுத்தி இருந்தார்கள். இவர்கள் இந்தப் படத்தில் எடுத்த அனைத்து காட்சிகளும் கிராபிக்ஸ் இல்லாமல் நிஜ சீன்களாக எடுக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தில் விமான சண்டைக்காட்சி ரசிகர்களுக்கு மிகுந்த விருந்தாக இருந்தது. அந்த சண்டையை பார்க்கும்போது கிராபிக்ஸ் என்றே தெரியாது. இந்தத் திரைப்படம் மெதுவாக சென்றாலும் சண்டைக்காட்சிகள் காமெடி என்று மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரபே ஜட்கின்ஸ், ஆர்ட் மார்கம் மற்றும் மாட் ஹாலோவே திரைக்கதையை அமைத்து இருக்கிறார்கள்.
இந்த திரைப்படம் மக்களுக்கு பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும் ஆனாலும் சில காமெடி காட்சிகள் மட்டுமே மக்களுக்கு தவிர்த்திருக்கலாம் என்று தோன்றியிருக்கும். அதுமட்டுமல்லாமல் தங்கப் புதையல் எடுக்கும் போது மான்காடா ஆட்கள் எப்படி சரியான இடத்தை தேடி வந்தார்கள் என்ற குளறுபடி திரைக்கதையில் இருக்கிறது. ஆனால் தமிழ் மொழியில் பார்க்கும்போது இந்த குளறுபடிகள் மக்களுக்கு நல்ல புரியும்படி காட்டி இருப்பார்கள்.
இந்த திரைப்படம் ஹாலிவுட்டுக்கு மிகவும் சரியான படமாக மக்களுக்கு காண்பித்து இருக்கிறார்கள். ஒரு கேம் சீரியஸ் வைத்து படத்தை மிகவும் அழகாக பூர்த்தி செய்திருக்கிறார்கள். அன்சார்டட் திரைப்படம் ஒரு நல்ல கதைக்களமாக இருக்கிறது.